புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (08:33 IST)

வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வரவேண்டாம்… பொதுமக்களுக்கு அறிவிப்பு!

சென்னையின் முக்கிய மீன் கடையான வானகரத்துக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் விற்கப்படுகின்றன. எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய மீன் மார்க்கெட்டாக இருந்து வருவது வானகரம் மீன் மார்க்கெட். அங்கே இனிமேல் சில்லறை விலையில் பொதுமக்களுக்கு மீன் விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டு, அதனால் மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.