திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (11:19 IST)

அராஜகம் செய்வது ஓபிஎஸ் தான்: பா வளர்மதி ஆவேசம்!

valarmathi
அராஜகம் செய்வது ஓபிஎஸ் தரப்பு தான் என ஈபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை நடைபெற்று வருகிறது என்பதும் இது குறித்து முடிவெடுக்க நாளை சென்னையில் பொதுக்குழு கூட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது பொதுக்குழுவை நடத்தியே தீருவது என ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது 
 
இந்த நிலையில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகம் என்றும் அராகம் செய்வது யார் என்று மக்களுக்கு தெரியும் என்றும் வளர்மதி தெரிவித்துள்ளார்
 
மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்