1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:06 IST)

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: வைத்திலிங்கம்

vaithilingam
அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக பொது குழு கூடியது என்பதும் அந்த பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறை நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவி கொண்டு வருவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும், இருதரப்பு வாதங்களும் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தீர்ப்பில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
 
இந்த நிலையில்  உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக பொது குழுவை கூட்டியதுதான் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்றும் பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சொல்லவில்லை என்று கூறிய வைத்திலிங்கம் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தீர்ப்பை மறு ஆய்வு செய்ய போறேன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran