1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (14:04 IST)

ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுக ரூ.3000, அதிமுக ரூ.2000 பணப் பட்டுவாடா என புகார்..!

money
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் அதிமுக உள்ளட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு கௌரவ பிரச்சனை என்றும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ஆளும் கூட்டணி கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன என்பதும் 13 அமைச்சர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை பணம் கொடுத்து அடைத்து வைத்திருப்பதாகவும் சட்டவிரோதமாக பணம் கொடுத்து வருவதாகவும் புகார்கள் இருந்துள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகள் திமுக 3000 ரூபாய் பட்டுவாடா செய்ததாகவும் அதிமுக 2000 ரூபாய் பட்டுவாடா செய்வதாகவும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உள்பட ஒரு சிலர் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் வீடு வீடாக சென்று திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தேர்தல் அதிகாரி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் வாக்குப்பதிவுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் அதிகாரி இதில் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran