1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vairamuthu tribute for Vivek

அய்யோ ! சிரிப்பு செத்துவிட்டதே... வைரமுத்து இரங்கல்!!

நடிகர் விவேக் மறைவு
இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் விவேக்கிகு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் வைரமுத்து. 

 
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.  
 
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, அய்யோ ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டாரே . திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே என்று  நடிகர் விவேக் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி ஸ்டாக் இல்லாமல் மூடப்பட்ட தடுப்பூசி மையங்கள் !