திரையுலகுக்கு மட்டும் அல்ல தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு… டிடிவி தினகரன் இரங்கல்!

Last Modified சனி, 17 ஏப்ரல் 2021 (08:32 IST)

மறைந்த தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர் விவேக்கின் மரணம் குறித்து டிடிவி தினகரன் டிவிட்டரில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பலரும் அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் டிடிவி தினகரன் ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
நடிகர் விவேக்
காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் திரு.விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். விவேக் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்’ என இரங்கல் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :