திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (07:54 IST)

விவேக்குக்கு உரிய மரியாதையைத் தருமா அரசு?

நடிகர் விவேக் மாரடைப்பால் இறந்தது அவரது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது அவரது திரையுலக சகாக்கள் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசு சம்மந்தப்பட்ட அனைத்து விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட விளம்பரங்களிலும் தாமாக முன் வந்து நடித்தவர் மற்றும் இளைஞர்கள் இடையே மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவித்தவர் எனப் பல்வேறு சமூக நோக்குள்ள செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்ட விவேக்கின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.