வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (18:51 IST)

அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி: அயோத்தி சாமியார் அதிரடி அறிவிப்பு..!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி என அயோத்தி சாமியார் ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உதயநிதியின் புகைப்படத்தை அவர் தீயிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாஜகவினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்துமத ஆதரவாளர்களும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தியதோடு அவரது தலைக்கு ரூபாய் 10 கோடி என்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அறிவித்துள்ளார். 
 
அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதை அவர் கண்டித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran