1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (08:04 IST)

உதயநிதி பேச்சால் I.N.D.I.A கூட்டணியே உடையும்: வானதி சீனிவாசன்

உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு I.N.D.I.A கூட்டணியை உடைக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது என  பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
உதயநிதி குடும்பத்தில் இன்னும் எத்தனை பேர் வந்தாலும் சனாதனத்தை ஒழிக்க முடியாது என்றும் அது ஒரு வாழ்வியல் முறை என்றும் தெரிவித்தார். சனாதனத்தை ஒழிப்பேன் என்று அவர்கள் பேசப்பேச அது வளர்த்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் அவர் கூறினார். 
 
தற்போது I.N.D.I.A கூட்டணியில் உள்ளவர்களே உதயநிதியின் பேச்சு குறித்து விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர் என்றும் உதயநிதியின் பேச்சால் I.N.D.I.A கூட்டணியை உடையும் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
கருணாநிதி முக ஸ்டாலின் ஆகியோர் இந்து மதத்திற்கு எதிராக பேசி இந்து மதத்தை அழிக்க முயற்சித்தனார் என்றும் அந்த வரிசையில் உதயநிதி செய்து வருகிறார் என்றும் அவரது குடும்பத்தில் இருந்து இன்னும் எத்தனை பேர் வந்தாலும் இந்து மதத்தையும் சனாதனத்தையும் யாராலும் அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva