1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vairamuthu says about karunanidhi

நாசா, மைக்ரோசாஃப்டில் தமிழர்கள் பணிபுரிய மிகப்பெரும் காரணம் கருணாநிதி: வைரமுத்து

vairamuthu
நாசா, மைக்ரோசாஃப்டில் இன்று தமிழர்கள் அதிகம் பணி புரிவதற்கு காரணம் முத்தமிழ்அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் திமுக சார்பில் கவியரங்கம் ஏற்பட்டு நடைபெற்றது 
 
அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் கவியரசு வைரமுத்து பேசும்போது நாசா, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் தமிழர்கள் அதிகம் பணிபுரிய மிகப் பெரும் காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார் 
 
அவருடைய பெருமைகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்றிரவு 7 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!