வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (21:11 IST)

''கலைஞரின் 100 வது பிறந்த நாள்''- முதல்வர் முக. ஸ்டாலின் புதிய உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  பிறந்த நாள் வரும் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின்  100 வது பிறந்த நாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதுபற்றி முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மானமிகு சுயமரியாதைக்காரர் - மாநில உரிமையின் முகம் - பேரறிஞர் அண்ணா கண்ட மாபெரும் தமிழ்க் கனவைத் தன் நெஞ்சிலேந்தி நனவாக்கிய கொள்கை வீரர் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நாளை தொடங்கவுள்ளதையொட்டி ‘கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை’ மகாத்மா காந்தியடிகளின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான மாண்புமிகு கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் முன்னிலையில் வெளியிட்டோம்.

கலைஞர் நூற்றாண்டு விழா என்பது வெறுமனே புகழ்பாடும் கூட்டங்களாக அல்லாமல், மக்கள் பயன்பெறும் விழாவாக அமைய இருக்கிறது. அவ்வகையில்தான், கிண்டியில் மருத்துவமனையும் மதுரையில் நூலகமும் பிரமாண்டமாக எழுந்து நின்று திறப்பு விழா காண உள்ளன. இவ்வரிசையில், காலமெல்லாம் கலைஞரின் புகழ் ஒளிரும் வகையில் மற்றுமொரு பெருமைமிகு அடையாளமாக #KalaignarConventionCentre எனும் உலகத்தரத்திலான  பயன்பாட்டுச் சின்னம் 25 ஏக்கர் பரப்பளவில் அறிவுக்குடியிருப்பாக அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன்.

ஆண்டு முழுவதும் கலைஞர் சாதனைகளை எடுத்துச் சொல்லி, மக்கள் மகிழ்ச்சி அடையும் திட்டங்களுடன் கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், பல்துறை வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்!’’ என்று தெரிவித்துள்ளார்.