1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (13:49 IST)

ஒரே சமயத்தில் பூமியை நோக்கி வரும் 5 விண்கற்கள்! – நாசா தகவல்!

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்
இன்று மற்றும் நாளை மறுநாளுக்குள் பூமியை நோக்கி 5 விண்கற்கள் நகர்ந்து வந்து கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சுற்றி திரிந்து வரும் நிலையில் சில விண்கற்கள் சூரிய ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. இவ்வாறாக வரும் விண்கற்கள் பெரும்பாலும் பூமியில் மோதாமல் கடந்து சென்று விடுகின்றன.

அவ்வாறாக இன்று மட்டும் இரண்டு விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. விண்கல் KZ2 என்ற 63 அடி அகலமுள்ள விண்கள் பூமியை 4.7 மில்லியன் கிலோ மீட்டர் இடைவெளியில் இன்று கடந்து செல்கிறது. அதேபோல KS2 என்ற 68 அடி அகலமுள்ள விண்கல்லும் இன்று பூமியை 3.9 மில்லியன் கி.மீ தொலைவில் கடந்து செல்கிறது. இந்த விண்கல்லின் வேகம் மணிக்கு 39,963 என்ற வேகத்தில் உள்ளது.

இதுதவிர ஜூன் 4ம் தேதியன்று JE5, JR2, HO18 என்று பெயரிடப்பட்ட மூன்று பெரிய விண்கற்கள் ஒரே சமயத்தில் பூமியை கடந்து செல்கின்றன. ஆனால் இவற்றால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.