தொடர்புடைய செய்திகள்
- நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்த முதல்வர்
- 'ஆஹா தமிழ்’ ஓடிடி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
- முதல்வர், அமைச்சர்கள் இல்லாத கவர்னரின் தேநீர் விருந்து: யார் யார் கலந்து கொண்டார்கள்?
- அரசு ஊழியர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே மதிய உணவு நேரம்: முதல்வர் உத்தரவு
- மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் -முதல்வர் ஸ்டாலின்
இன்று அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்த நாள்: வைரமுத்து கவிதை
இன்று அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்த நாள் என கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நரிக்குறவ இன குடும்பத்தினருடன் காலை உணவு சாப்பிட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் இந்த நிகழ்வு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் வந்தால்
கறிச்சோறு போடுவோம்
என்றார்கள்
கறிச்சோறு போட்டு
நாங்கள் வாக்குத் தவறாதவர்கள்
என்று மெய்ப்பித்துவிட்டார்கள்
நரிக்குறவர் இனத்து
நல்ல மக்கள்
அதைச் சாப்பிட்டு
நான் நாக்குத் தவறாதவன்
என்று மெய்ப்பித்துவிட்டார்
முதலமைச்சர்
அம்பேத்கருக்கு
இன்று
இன்னுமொரு பிறந்தநாள்
