'ஆஹா தமிழ்’ ஓடிடி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
'ஆஹா தமிழ் ஓடிடி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான 'ஆஹா ஓடிடி இன்று முதல் தமிழிலும் இயங்க உள்ளது
தமிழ் ஓடிடி ஓடிடி செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் புதிய தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து தமிழக முதல்வரின் மகன் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆஹா தமிழ் ஓடிடி OTT ஆப்-பை தொடங்கிவைத்து திரைத்துறை வளர்ச்சிக்கு பங்காற்றிய கலைஞர்களை கௌரவித்த நிகழ்வில் கலந்துகொண்டோம். திரைப்படம், வெப்சீரிஸ் உள்ளிட்ட மிகச்சிறந்த பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கி வெற்றிபெற ஆஹா தமிழுக்கு வாழ்த்துகள்