1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (15:13 IST)

அப்படி என்ன கேட்டு இருப்பாரு? செய்தியாளரின் கேள்வியால் கடுப்பான வைகோ!!

தேச துரோக வழக்கு குறித்து இன்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வைகோ கடுப்பான சம்பபம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கானது சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ கடுப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செய்தியாளர் ஒருவர், தேசத் துரோக வழக்கில் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத்தயார் என்று கூறி விட்டு தற்போது மேல்முறையீடு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
 
இதனால் கடுப்பான வைகோ, தங்களிடம் ஆலோசனை கேட்க மறந்து விட்டதாக கிண்டல் செய்தார். அதோடு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று நான் ஒரு போதும் கூறவில்லை என வைகோ தெரிவித்தார்.