1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (16:14 IST)

ராஜ்யசபாவுக்கு 6 எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு - அன்புமணி, வைகோ எம்.பி ஆனார்கள்

ராஜ்யசபாவின் மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு அதிமுக சார்பில் முகம்மது ஜான், சந்திரசேகர், அன்புமணி ஆகியோரும், திமுக சார்பில் சண்முகம், வில்சன், வைகோ ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 6 எம்.பிக்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அவை தலைவர் சீனிவாசன் அறிவித்தார்.