வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:07 IST)

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..!

மதுரை சித்திரைத் திருவிழா சமீபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இதில் முக்கிய நாளான கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா தொடங்கி தற்போது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து வரும் 23ஆம் தேதி வரை தினமும்  வினாடிக்கு 1000 அடி கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
 
இன்றிலிருந்து 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran