செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (17:54 IST)

பி.டி.ஆரின் தாயாருக்கு செங்கோல் வழங்கக் கூடாது.. மனு தாக்கல் செய்தவருக்கு நீதிபதி கண்டனம்..!

Madurai Court
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் கணவரை இழந்தவர் என்றும் அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் வழங்கக்கூடாது என்றும் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக உள்ள அமைச்சர் பி.டி.ஆரின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக் கூடாது என தினகரன் என்பவர்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ‘இது பிற்போக்குத்தனமான கோரிக்கை என அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் கோவிலில் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்துதானே? கணவரை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என்றும்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், ‘வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு  என்றும், சமூக நீதிக்கு கிடைக்கப்பட்ட வெற்றி என்றும், அதேபோல் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றும், எந்த காரணத்தை காட்டியும் பெண்களை இழிவு படுத்த கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

Edited by Mahendran