திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (11:16 IST)

குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகுந்த பாம்பு.. பயணியை கடித்ததால் பரபரப்பு..!

குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் திடீரென பாம்பு நுழைந்து பயணியை  கடித்து விட்டதை அடுத்து அந்த பயணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை - குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் நேற்று காலை கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து  மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது ஆறாவது பெட்டியில் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் எர்ணாகுளம் நிலையத்தை நெருங்கிய போது திடீரென ஒரு பாம்பு அவரை கடித்துவிட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அவர் வலி தாங்காமல் துடித்தார். இந்த நிலையில் ரயில் அடுத்த ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் ரயில் நிறுத்தப்பட்டு அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக சோதனை செய்ததில் பாம்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து பெட்டியின் அனைத்து கதவுகளையும் மூடி ரயிலில் இருந்து அந்த ஒரு பெட்டி மட்டும் பிரிக்கப்பட்டது.  பயணிகள் வேறு பெட்டியில் ஏற்றப்பட்ட பின்னர் அந்த ரயில் புறப்பட்டு சென்றது.

Edited by Mahendran