ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் தாலிச் செயின் பறிப்பு!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அச்சம்பட்டி ஊராட்சி சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீசுதா முருகன், தலைவராக உள்ளார்.
இவர் அலங்காநல்லூரில் இருந்து,அச்சம்பட்டி சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் இவர் சென்றார்.
பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து இவரை கீழே தள்ளி களத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயின் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.
இது தொடர்பாக, அலங்காநல்லூர் போலீசில் ஊராட்சி மன்றத் தலைவி ஸ்ரீசுதா முருகன். புகாரின் பேரில், போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை சென்றவர்களை வலை வீசி தேடி வருவதுடன் அப்பகுதியில் சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
செயின் பறிப்பு நிகழ்வால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.