1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vaduvur peoples banner for mayor shelke

எந்த ஊரா இருந்தா என்ன.. நல்லது செஞ்சா பாராட்டு! – மயூர் ஷெல்கேவுக்கு வடுவூரில் பேனர்!

Tamilnadu
மகராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ஊழியரை பாராட்டி வடுவூரில் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.

மும்பை சராகத்திற்குட்பட்ட வங்கனி ரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற பெண்ணுடன் சென்ற குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்த நிலையில் ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே பாய்ந்து சென்று நொடி பொழுதில் குழந்தையை காப்பாற்றினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் அவருக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரை பாராட்டி தமிழகத்தில் மன்னார்குடி அருகே உள்ள வடுவூரில் அவ்வூர் மக்கள் மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டு தெரிவித்து பேனர் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
பிச்சை எடுங்க.. என்ன வேணா பண்ணுங்க.. ஆக்ஸிஜன் வரணும்! – மத்திய அரசுக்கு நீதிமன்றம் காட்டம்!