நல்லா இருக்க தமிழகத்தை பிரிக்க நினைக்க வேண்டாம்! – முதல்வரை சந்தித்த வடிவேலு!

Prasanth Karthick| Last Modified புதன், 14 ஜூலை 2021 (10:39 IST)
நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில் தமிழகத்தை பிரிக்க நினைக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு ரூ.5 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழகத்தில் உலகமே வியக்கும் அளவிற்கான நல்லாட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார். மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டு தங்களது சந்ததிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நன்றாக உள்ள தமிழகத்தை பிரிக்கும் நோக்கில் யாரும் பேச வேண்டாம்” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :