புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (10:05 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி; அதிமுக தொண்டர் போஸ்டரால் பரபரப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி; அதிமுக தொண்டர் போஸ்டரால் பரபரப்பு!
பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அதிமுக தொண்டர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமும் ஒன்று. இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அதிமுக தொண்டர் ஒருவர் ”பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இப்படிக்கு அதிமுக உண்மை தொண்டன்” என போஸ்டர் அடித்துள்ளார்,

அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் மு.க.ஸ்டாலின் படமும் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.