தொடர்புடைய செய்திகள்
- ’பாஜக அரசு ’ மக்களிடம் இருந்து எதையோ மறைக்கப் பார்கிறது - ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
- பட்ஜெட்டில் வரி உயர்வால்..பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு !
- 'தமிழ்ச்செய்யுளை ' கூறி வரி விதிப்பை விளக்கிய நிர்மலா சீதாராமன் !
- பட்ஜெட் 2019: மறுபடியும் உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்
- ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி கடன் திட்டம் – அதிரடி பட்ஜெட் சலுகை
தொலைநோக்குப் பார்வை கொண்ட மத்திய பட்ஜெட் - ஓ.பன்னீர் செல்வம்
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டில் முதன் முதலாக முழுநேரம் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமையான ஒன்று. இந்நிலையில் இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது குறித்து அனைவரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் சீதாராமன் , பிசிராந்தையார் பாடிய தமிழ்ச்செய்யுளை மேற்கோள் கூறி அதற்கு விளக்கம் கொடுத்து தந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து பலரும் பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளதாவது :
புதிய வாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி, நவீன இந்தியாவை தொலைநோக்குப் பார்வை உள்ளதாக மத்திய பட்ஜெட் உள்ளது. தொலை நோக்குப் பார்வையுடன், ஏழ்மையை ஒழித்து வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் பார்வையுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு தமிழக அரசின் சார்பாக பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
