புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (20:28 IST)

தமிழ்நாட்டின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனி இதுதான்; தமிழிசை செளந்திரராஜன்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி திமுக தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல் இந்த பட்ஜெட்டை ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் பாராட்டியும், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தும் வருகின்றன.
 
அந்த வகையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், 'மத்திய பட்ஜெட், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது என விமர்சனம் செய்தார்.
 
முக ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த தமிழிசை, 'தமிழ்நாட்டின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியான திமுக தலைவர் பேட்டி. கழகம் ஒரு குடும்ப கார்ப்பரேட் கம்பெனிதானே? என்று தெரிவித்துள்ளார்.