செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2019 (17:35 IST)

பட்ஜெட்டில் வரி உயர்வால்..பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு !

இன்று மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சாலை உள்ளிட்ட கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 1 கூடுதல் வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நெடுஞ்சாலை வரி ரூ. 1, உற்பத்தி வரி ரூ. 1 என லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. மேலும் உள்ளூர் வரிகளை சேர்த்து பெட்ரோல் ரூ.2.50, டீசல் ரூ.2.30 என்று உயர்கிறது.
 
ஏற்கனவே பெட்ரோல் உயர்வு என்று மக்கள் புலம்பிவரும் நிலையில் இந்த பெட்ரோல் விலை உயர்வால் நிச்சயம் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு  உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.