'தமிழ்ச்செய்யுளை ' கூறி வரி விதிப்பை விளக்கிய நிர்மலா சீதாராமன் !

nirmala
Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (14:12 IST)
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டில் முதன் முதலாக முழுநேரம் மத்திய  நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமையான ஒன்று. இந்நிலையில் இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டின் உள்நாட்டு உள்பத்தி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது குறித்து அனைவரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது   நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் கூறி அவர் விளக்கினார்.
 
வரிவிதிப்பு முறை குறித்தும் , வரி வசூழ் குறித்து உரையாற்றிப் பேசிய நிர்மலா சீதாராமன் புறநானூற்றில் பிசிராந்தையார் எழுதிய யானை புக்க புலம் போல என்ற பாடலையும் மேற்கோள் கூறினார்..
அப்பாடல் :
’காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவனாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே’
 
அதவாது, விவசாய நிலத்தில் விளைந்துள்ள நெற்கதிர்களை அறுவறை செய்து, நெல்மணிகளை பிரித்ஹ்டு எடுத்து அரிசியாக்கி, அதை சோற்றுக்கு கவளமாக்கி யானைக்கு உணவாகக் கொடுத்தால் அந்த சிறு நிலத்தில் விளைந்த உணவு கூட யானைக்கு பலநாள் உணவாக இருக்கும். ஆனால் அதே யானையை வயலுக்குச் சென்று மேய விட்டால் ஒட்டுமொத்த பயிரையும் மிதுத்து நாசமாக்கிவிடும்.அதன் உணவுக்கு போதாததாகிவிடும்.
அதுபோல் குடிமக்களை அதிகமான வரிகளை அரசன் விதித்தால் யானை புக்க புலம் போல அரசனுக்கும் பயனில்லாமல், மக்களுக்கும் வழியில்லாமல் வீணாகும் என்பதுதான் அப்பாடலி விளக்கம் ஆகும். 
பிசிராந்தையார் என்று கூறுவதற்கு முதலில் தவறான உச்சரிப்பை சீதாராமன் சீறியதால் அவையில் சிரிபொலி எழுந்தது. பின்னர் திருத்தி அமைச்சர் வாசித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :