செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (10:48 IST)

உடுமலை கவுசல்யா பணியிலிருந்து சஸ்பெண்ட்!! என்ன காரணம்?

உடுமலை கவுசல்யா பணியிலிருந்து சஸ்பெண்ட்!! என்ன காரணம்?
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உடுமலை ஆணவக்கொலை சம்பவத்தில் இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார் சமீபத்தில் கவுசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
 
இந்நிலையில் குன்னூர் வெலிங்கடன் கன்டோண்மென்டில் க்ளார்க் பணியில் இருந்து வந்த கவுசல்யாவை நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றத்திற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.