1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (11:35 IST)

உடுமலை கவுசல்யா மறுமணம்: பறை இசை கலைஞருடன் புது வாழ்க்கை

உடுமலை கவுசல்யவை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அப்படிபட்ட ஒரு மரணத்தை சங்கர் சந்தித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த ஆவணக் கொலை தமிழகத்தையே உலுக்கியது. 
 
உடுமலையை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சங்கர் என்பவரை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களை மீறி திருமணம் செய்து கொண்டார்.
 
திருமணத்திற்கு பிறகு இவர்கள் கடைத்தெருவுக்கு சென்று வீடு திரும்பும் போது, கவுசல்வாவின் தந்தை மற்றும் உறவினர்கள் சங்கரை வெட்டி கொன்றனர். 
 
இதன் பின்னர் சங்கரை கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என போராடி தனது தந்தை உள்ளிடோருக்கு தூக்குதண்டனை வாங்கி கொடுத்தார். 
 
இந்நிலையில் இவர் இன்று கோவையை சேர்ந்த பறை இஅசை கலைஞர் சக்தியை மறுமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.