தொடர்புடைய செய்திகள்
- உடுமலை கவுசல்யா மறுமணம்: பறை இசை கலைஞருடன் புது வாழ்க்கை
- குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா....?
- சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்: தமிழிசைக்கு ஸ்டாலின் நறுக் பதிலடி
- வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்....!
- டிவிஎஸ் ரூ.2 கோடி, சக்தி மசாலா ரூ.1கோடி: குவிகிறது கஜா நிவாரண நிதி
மறுமணம் செய்த கவுசல்யாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உடுமலை ஆணவக்கொலை சம்பவத்தில் இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார்
இந்த நிலையில் இன்று அவர் பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். கவுசல்யாவின் மறுமணத்திற்கு பலர் வாழ்த்து தெரிவிதுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கவுசல்யா-சக்தி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
பறை இசை முழங்க இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் தமிழ்ச் சமூக வார்ப்புகளான சகோதரி கவுசல்யா - சக்தி ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இல்வாழ்விலும், சமூக வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டும்! என்று கூறியுள்ளார்.
முன்னதாக சக்தியுடன் திருமணம் முடிந்தவுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கணவருடன் இணைந்து பறை இசைத்து கவுசல்யா நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பறை இசை முழங்க இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் தமிழ்ச் சமூக வார்ப்புகளான சகோதரி கவுசல்யா - சக்தி ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) December 9, 2018
இல்வாழ்விலும், சமூக வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டும்! pic.twitter.com/aMCxEnAa74
அடுத்த கட்டுரையில்
