செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (09:46 IST)

இரும்புத்திரை' இயக்குனரின் தாய் சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு குறித்த வழக்கு ஒன்றில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர்  கவிதா என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது தெரிந்ததே.

தற்போது கவிதா ஜாமீனில் வந்துள்ள நிலையில் இவரை இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவிதா என்பவர் விஷால் சமந்தா நடித்த 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அரசு அதிகாரி குற்றவழக்கில் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரத்திற்குள் அவரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்ற விதி இருக்க அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் கவிதாவுக்கு சாதகமாக செயல்பட்டார். இந்த நிலையில் நீதிமன்றத்தின் கேள்விக்கு பின்னர் தற்போது கவிதா முன் தேதியிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.