தொடர்புடைய செய்திகள்
- சொல்லியும் கேட்காத விஜய்!. கோபத்தில் பாஜக மேலிடம்!.. ஆளுநர் மூலம் அட்டாக்!..
- தலைமறைவான செந்தில் பாலாஜி!. தேடுதல் வேட்டையில் காவல்துறை!.. அடுத்து என்ன?...
- தத்துவம் இல்லாத அரசியல்!.. உங்களை கொன்னு கூட அவன் ஜெயிப்பான்!.. இளவரசு யாரை சொல்றாரு!..
- விஜய்க்கு போன தலித் ஓட்டுகள்!.. புலம்பும் திருமாவளவன்!. நடப்பது என்ன?...
- 35 வருஷம் உழைப்பு வீணாப்போச்சி!.. நொந்துபோய் பேசிய திருமாவளவன்!...
விஜயை சீண்ட சட்டசபையில் சீமான் இருக்கணும்!.. உதயநிதியின் ஆசை நிறைவேறுமா?..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டது. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கணக்கு போட்ட திமுக 74 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்து விட்டது. அதிலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோற்றுப் போய்விட்டார்.
இது திமுகவுக்கு பெருத்த அவமானத்தை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைத்து விட்டன. சமீபத்தில் வைகோவும் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்து விட்டார். எனவே, தவெகவின் பலம் கூடிக் கொண்டே போகிறது. திமுகவின் பலம் குறைந்துவிட்டது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட சீமானும் உதயநிதி ஸ்டாலினும் நெருக்கம் காட்டினார்கள். மேடையில் பேசிய சீமான் உதயநிதி ஸ்டாலினை தம்பி என பாசத்தோடு அழைத்தார். தற்போது எதிரிக்கு எதிரி நண்பன் என சொல்வது போல சீமான் தங்களுடன் இருந்தால் அது பலமாக இருக்கும் என உதயநிதி நினைக்கிறாராம்.
அதாவது சட்டசபைக்குள் சீமான் வரவேண்டும் என்று உதயநிதி நினைக்கிறாராம். ஏனெனில் சட்டமன்றத்தில் மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக் என அனைத்து கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவாக நிற்கிறது. அதிமுகவும் தீவிர எதிர்ப்பை காட்டுவதில்லை. இந்த சூழ்நிலையில் சீமான் உள்ளே வந்து புள்ளி விபரத்தோடு தனது ஸ்டைலில் தவெகவை எதிர்த்தால் அது தனக்கு துணையாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கருகிறாராம். எனவே இடைத்தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் சீமானை நிறுத்தி அந்த தொகுதியில் திமுக அவரை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.