1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bjp head is anger with tvk cm vijay

சொல்லியும் கேட்காத விஜய்!. கோபத்தில் பாஜக மேலிடம்!.. ஆளுநர் மூலம் அட்டாக்!..

vijay arlekar
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய போது 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுடன்  கூட்டணி வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். விஜய்க்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து ராகுலுக்கும் அந்த எண்ணம் வந்தது. காங்கிரஸிலிருந்து பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர் விஜயை நேரடியாக சந்தித்து கூட்டணி பற்றி பேசினார்கள். அதோடு விஜய்க்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பை பற்றி அவர்கள் தொடர்ந்து ஊடகங்களில் பேசினார்கள்...

ஆனால் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே போன்றவர் திமுகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்பியதால் அது நடக்கவில்லை. ஆனால் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது காங்கிரஸ். அதோடு தவெகவின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுவிட்டது.

அதாவது, இரண்டு அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. அடுத்து நடக்க உள்ள உள்ளாட்சித் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி தமிழகத்தில் காங்கிரசை விஜய் வளர்ப்பதை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை என சொல்லப்படுகிறது..

அதிகாரிகள் மூலமாக பலமுறை சொல்லியும், தூது அனுப்பியும் விஜய் பாஜகவின் பேச்சைக் கேட்கவில்லை என்கிறார்கள். தவெக காங்கிரஸோடு மேலும் நெருக்கமானால் பாஜக தரப்பிலிருந்து நெருக்கடிகள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில்து தவெகவிடம் ஆளுநர் அர்லேகர் விளக்கம் கேட்பார் எனத்தெரிகிறது. இப்படி தவெகவுக்கு பல நெருக்கடிகளை ஆளுநர் மூலம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அரசியல் விமர்சகர்கள்.
அடுத்த கட்டுரையில்
ட்ரோல் பண்றாங்க!.. இனிமே இதுதான்!. அமைச்சர்களுக்கு விஜய் போட்ட ஆர்டர்!..