1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhyanidhi visit delhi to meet amitshah

டெல்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி.. வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண உதவி கேட்கவா?

வெள்ளம்
வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஏற்கனவே சுமார் 1000 கோடி ரூபாய் தந்துள்ள நிலையில் மேலும் நிதி கேட்க அமைச்சர் உதயநிதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய குழு தற்போதைய வெள்ள பாதிப்பை கணக்கிட்டு இருக்கிறார்கள். இந்த குழு நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்று கூடுதல் நிதி கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் வெள்ள நிவாரண நிதியாக எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்து மனுவாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவாக அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
யாருக்கெல்லாம் ரூ.6000 வெள்ள நிவாரணம்? அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!