1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (16:17 IST)

யாருக்கெல்லாம் ரூ.6000 வெள்ள நிவாரணம்? அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது யாருக்கெல்லாம் நிவாரண நிதி கிடைக்கும் என்பது குறித்த தமிழக அரசின் அரசு ஆணை வெளியாகியுள்ளது. இந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
 
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
 
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
 
அதன்படி புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலமாக ரொக்கமாக வழங்கப்படலாம் என்றும், இதனை முறையாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படலாம் என்றும், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்களைப் பொருத்த வரையில், அவர்கள் தங்களின் பாதிப்பு விபரங்களையும், வங்கி கணக்கு ஆகியவற்றை தெரிவித்து நிவாரணத்தொகையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம் எனவும், விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கப்பட்டது.
 
Edited by Mahendran