இணைய சேவை தரவரிசையில் இந்தியா ஆமை வேகம் ! அதிகரிக்கும் விமர்சனம்
இன்றைய காலக்கட்டத்தில் இணையதள சேவை இல்லாமம் உலகமே இயங்காது என்றபடி உலகம் வேகமாக சுழன்றுவருகிறது.
உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த நொடியே டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வருவதற்கு இணையதள சேவைகளின் பங்கு முக்கியமானது. கொரொனா காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடம் படிக்கவும், ஆன்லைன் மூலம் பரீட்சை எழுதவும் இது கூடுலாகப் பயன்படுகிறது.
இந்நிலையில் இணைய சேவை வேகத்தின் தரவரிசையில் இந்தியா உலகளவில் (12.41 Mbps ) 131 வது இடம் பிடித்துள்ளது.
சுமார் 183.03 Mbpd உடன் முதலிடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.
சமீபத்தி மத்திய பிரதேச அமைச்சர் ஒருவர் 50 அடி உயர ராட்டிணத்தில் ஏறி சிக்னல் கிடைக்க அமரிந்திருந்த வீடியோ வைரலானது. தற்போதைய டிஜிட்டல் இந்தியாவுக்கு இது அழகல்ல என்று காங்கிரஸ் தலைவர் சசிதரூ விமர்சித்துள்ளார்.