செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (12:15 IST)

இதுல எங்க சமூக விலகல் இருக்குன்னு சொல்லுங்க!? விஜயபாஸ்கருக்கு உதயநிதி கேள்வி!

தமிழகம் முழுவதும் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ள நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வியெழுப்பியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தளர்வுகளும் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகள் தவிர்த்து பல இடங்களிலும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பேருந்துகளில் சமூக விலகலை கடைப்பிடித்தல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் “இது, இன்று கரூரில் எடுக்கப்பட்ட காணொலி. இங்கு கடைப்பிடிக்கப்படும் சமூக விலகலை போக்குவரத்து அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் அவர்கள் கண்டறிந்து சொன்னால் உதவியாக இருக்கும். இந்த அடிப்படை பணியிலேயே தோல்வியை தழுவிய அரசு 10ம்வகுப்பு மாணவர்களை தொற்றிலிருந்து காப்பாற்றும் என்பது என்ன நிச்சயம்” என கேள்வியெழுப்பியுள்ளார்.