வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:52 IST)

அண்ணா பல்கலை.யில் உதயநிதிக்கு பதவி! – சபாநாயகர் அறிவிப்பு!

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விளக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக பொறுப்பளித்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு பல்கலைகழக ஆட்சி மன்றக்குழுவில் உதயநிதி பொறுப்பு வகிக்க உள்ளார்.