வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (15:01 IST)

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஒரு மனதாக பேரவையில் நிறைவேற்றம்!
 
நீட் தேர்வு பயத்தால் நேற்று சேலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் இன்று நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து  நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம் என முதல்வர் முக ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். 
 
அதையடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டு வரப்பட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இந்த நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.  நீட் விலக்கு மசோதாவை நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அரசு முடிவெடுத்துள்ளது.