1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. six persons arrested on nanguneri murder issue

நாங்குநேரி இரட்டைக்கொலை!.. 6 பேர் கைது!.. போலீசார் தீவிர விசாரணை..

naguneri
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்று இரவு டீக்கடையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் தாக்குதல் நடத்தினார்கள்.. அப்போது அந்த கும்பல் அந்த இடத்தில் பெட்ரோல் குண்டுகளையும் வீசியது. அதில் சிதறி ஓடிய இரண்டு பேரை அந்த கும்பல் வெட்டிக் கொன்றது. அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி எனவும், ஒருவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் சொல்லப்படுகிறது. அதில், 5 பேர் வெட்டுக்காயம் அடைந்தனர்.. காயம் அடைந்தவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்..

அதன்பின் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அவர்களை பிடிப்பதற்காக காவல்துறை சார்பில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டது. ஒரு பக்கம் சம்பந்தப்பட்டவர்களை உடனே பிடிக்க வேண்டுமென அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகல்  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த இரட்டைக்கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. விரைவில் கொலையின் நோக்கம் என்ன என்பது தெரிய வரும்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பொங்கல் பரிசு ரூ.3000.. அப்புறம் ஒரு ரூ.5000.. இன்று புதுசா ரூ.2000.. வாரி வழங்கும் முதல்வர் ஸ்டாலின்..!