எய்ம்ஸ் செங்கலை ஸ்டாலினிடம் கொடுக்கும் உதயநிதி: வைரல் டுவீட்
தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில் காலையிலிருந்தே திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ஆரம்பத்திலிருந்து முன்னிலையில் இருந்தனர். சற்றுமுன் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
எய்ம்ஸ் செங்கலை ஸ்டாலினிடம் கொடுக்கும் உதயநிதி: வைரல் டுவீட்
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக வெற்றி பெற்றதாக அறிவித்து எய்ம்ஸ் செங்கலை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதே செங்கலைதான் அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தில் உதயநிதியின் மகன் உள்பட அவரது குடும்பத்தினர் உள்ள குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வருவார் என்பதை குறிக்கும் வகையில் உள்ள இந்த புகைப்படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது