வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (15:38 IST)

பொறுப்பாளர்கள் கடைசி வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கவேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்!

வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடியும் வரை பொறுப்பாளர்கள் மையங்களை விட்டு வரவேண்டாம் என ஸ்டாலின் திமுக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் திமுக வேட்பாளர்களின் பொறுப்பாளர்களாக சென்றுள்ள தொண்டர்களுக்கு டிவிட்டர் வாயிலாக அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் ‘வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். #Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும்’ எனக் கூறியுள்ளார்.