வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (10:25 IST)

தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்தால் தான் பாஜகவை விரட்ட முடியும்: உதயநிதி சொன்ன குட்டிக்கதை..!

தமிழ்நாட்டில் இருந்து அதிமுகவில் ஒழித்தால் தான் பாஜகவை விரட்ட முடியும் என குட்டி கதை ஒன்றின் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 
 
விஷ பாம்பு ஒன்று வீட்டிற்குள் வந்துள்ளது. அதை எத்தனை முறை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே  இருக்கிறது  வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள் ஒளிந்து கொண்டுதான் அந்த பாம்பு வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது. 
 
பாம்பை விரட்டினால் மட்டும் போதாது. முதலில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பையையும் அகற்ற வேண்டும். வீடு என்பது தமிழ்நாடு. விஷ பாம்பு என்பது பாஜக. குப்பை என்பது அதிமுக. 
 
எனவே தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்தால் தான் பாஜகவின் விரட்ட முடியும் என்று குட்டி கதை ஒன்றின் மூலம் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran