திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (15:21 IST)

மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றிதான்.. இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ..!

மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான் என்றும் இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கு வெற்றியே கிடைக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் மதுரையில் அதிமுக பிரமாண்டமான மாநாடு நடந்ததை அடுத்து இன்று அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்த போது மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான், இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 
 
மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கூடிய கூட்டத்தை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை என்றும் இது தானா சேர்ந்த கூட்டம் என்று தெரிவித்தார். 
 
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்திடுவோம் என்றார்கள், இப்போது என்ன செய்து விட்டார்கள், நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்திருந்தும் திமுக நாடகமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva