திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (11:54 IST)

கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: தீர்ப்புக்கு பின் ஈபிஎஸ் பேட்டி..!

அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன் தீர்ப்பளித்த நிலையில் தீர்ப்புக்கு பின் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அதிமுக என்பது ஒன்றுதான் இன்னொரு பிரிவு அதில் கிடையாது என்று தெரிவித்தார். 
 
அதேபோல் அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்றும்  தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார்.
 
Edited by Mahendran