அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுக பொது குழு வழக்கின் தீர்ப்பு இன்று சென்னை ஐகோர்ட் வெளியிட்ட நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஓபிஎஸ் தரப்பின் முக்கிய பிரமுகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
அதிமுக பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் செல்லாது என்றும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே அதிமுக பொது குழு நடத்தப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் இது சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக சென்னை ஐகோர்ட் அறிவித்தது
எனவே அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நீக்கியது செல்லும் என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்ட போராட்டம் தொடரும் என்றும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார் முட்டுப்பட்டி
Edited by Mahendran