1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (15:09 IST)

புரட்டாசி சனிக்கிழமை.. உதயநிதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம்..!

புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் அதிகமாக கூடி இருந்த நிலையில் உதயநிதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கோவிலுகு வந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உதயநிதி அறக்கட்டளை சார்பில்  பொங்கல், தயிர்சாதம், புளியோதரை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது
 
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாகி பி.கே.பாபு, அவருடன் ராஜ்குமார், நரேஷ், பிரகாஷ், ஆனந்தன், மணிகண்டன், ஸ்ரீ கணேஷ் உள்ளிட்டோர் பக்தர்களுக்குப் பிரசாதங்களை வழங்கினர்.
 
Edited by Siva