#AsianGames2023: பதக்கம் வென்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.
இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இந்த நிலையில், #AsianGames2023-ல் 3000 மீட்டர் speed skating போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
#AsianGames2023-ல் 3000 மீட்டர் speed skating போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையர் கார்த்திகா ஜெகதீஸ்வரன் மற்றும் ஆர்த்தி கஸ்தூரிராஜ் ஆகியோருக்கு பாராட்டுகள்.
சகோதரி ஆர்த்தி கஸ்தூரி ராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு-ன் Mission International Medals Scheme திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்றவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
நம் வீராங்கனையர் இருவரும் அடுத்தடுத்து வரும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று மேலும் பல பதக்கங்களை குவிக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.