1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (13:48 IST)

இருந்தாலும் உதயநிதிக்கு வாய் ஓவர்தான்: பொதுக்கூட்டத்தில் இப்படியா பேசுவது?

நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றதையடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் உதயநிதி பங்கேற்றார். 
 
நாடளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றியை தொடர்ந்து திருச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களோடு சிறப்பு அழைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். 
 
அப்போது பொதுக்கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றுள்ளார். நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அத்தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுத்தர வேண்டும். இதற்கு திருநாவுக்கரசர் பரிந்துரைக்க வேண்டும். அத்தொகுதியில் திமுக வெற்றி பெறும்.
மேலும், அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களில் வென்று சாதனை படைக்க வேண்டும். கூட்டணி கட்சிகள் நமக்கு தேவை. அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான இடங்கள் மட்டும் கொடுத்து திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.