புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (13:34 IST)

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி அழிப்பு – திருச்சியில் பரபரப்பு !

திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியில் எழுதப்பட்டிருந்த பெயர்கள் மைப்பூசி அழிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு மும்ழொழிக் கொள்கையை மீண்டும் கொண்டுவர நினைப்பதை அடுத்து இந்தி திணிப்புக்கு எதிராகப் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான பெல், விமானநிலையம், வானொலி நிலையம், அஞ்சல் அலுவலகம் ஆகிய இடங்களின் பெயர்கள் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் எழுதப்பட்டிருந்தன.

இதையடுத்து நேற்று அதிரடியாக மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகள் மைப் பூசி அழிக்கப்பட்டுள்ளன. இதனால் திருச்சியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.